விழுப்புரம்-விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் என 1 கோடியே 4 லட்சம் ரூபாய் வரி பாக்கி உள்ளது.
இந்த வரி பாக்கி செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் சீல் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 362 ரூபாய் வரி பாக்கி செலுத்தாத டீ கடை, பிரியாணி கடைகளுக்கு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தலைமையில் அலுவலர்கள் சீல் வைத்தனர்.