ஆழ்வார்பேட்டை தேனாம்பேட்டை மண்டலம், 123வது வார்டுக்கு உட்பட்ட, ஆழ்வார்பேட்டை பகுதி, சி.பி.ராமசாமி சாலையில், 175 பேர் பங்கேற்கும் வகையில், சமுதாய நலக்கூடம் உள்ளது.
இது, 1993ல் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள, இந்த நலக்கூடத்தில், தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர், சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கட்டடத்தின் தற்போதைய நிலை, உறுதித்தன்மை என பல்வேறு காரணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, நலக்கூடத்தை முழுமையாக இடித்து, எம்.பி., நிதியின் கீழ் புதிதாக கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
'பழைய சமூக நலக்கூடம் இடிப்பதற்கான வேலை நடந்து வருகிறது. இதை முடித்து, சில வாரங்களில் புதிய கூடத்தை துவக்கி, எட்டு மாதங்களில் முடிக்க திட்டமிட்டு உள்ளோம்' என்றார்.