சென்னை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 'பினாகினி' விரைவு ரயில், நேற்று மதியம் 1:30 மணிக்கு நடைமேடை 4ல் வந்தது.
ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணியரின் உடைமைகளில் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்தின்படி, வாலிபர் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தும்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
சந்தேகமடைந்த போலீசார், அவர் வைத்திருந்த பைகளில் சோதனை மேற்கொண்டனர். அதில் 3.9 கிலோ கஞ்சா சிக்கியது. விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சமரு மஜ்ஹி, 33, என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.