பெரம்பூர், சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரில், நேற்று காலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக, மத்திய அரசு கடந்தாண்டு பட்ஜெட்டில், 240 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால், இந்தாண்டு பட்ஜெட்டில், 150 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அப்போது, நிதிக் குறைப்பால், தங்களுக்கான அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் பாதிக்கப்படும் என குறிப்பிட்டனர்.