விழுப்புரம்-மயிலம் பொறியியல் கல்லுாரி மற்றும் செவிலியர் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
மயிலம் கல்வி குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி குழும இயக்குனர் செந்தில் வரவேற்றார். மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜப்பன், மயிலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழ்ச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
டி.வி., புகழ் பேச்சாளரும், வின் யுவர் வீக்னஸின் நிறுவனருமான டாக்டர் ஜெகன் மாணவர்களிடையே தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் புத்தாக்க பயிற்சி அளித்தார். இரண்டு நாட்கள் நடைபெற்ற புத்தாக்க பயிற்சியில் மயிலம் பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளும், செவிலியர் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஏற்பாடுகளை மயிலம் பொறியியல் கல்லுாரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் அனைத்துத்துறை ஒருங்கினைப்பாளர்கள் செய்திருந்தனர்.