பெரம்பூர், :பெரம்பூர், கோபால் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ், 23. அவர், நேற்று காலை, 9:30 மணியளவில், அண்ணன் கார்த்திக்குடன், 26, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை கார்த்திக் ஓட்டினார்.
பெரம்பூர், பி.பி., சாலை, இடுகாடு அருகே வாகனம் நிலைதடுமாறியதில் விக்னேஷ் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த மாநகராட்சி குப்பை அகற்றும் லாரி, விக்னேஷ் மீது ஏறி, இறங்கியது. அதில், அண்ணன் கண் எதிரில் தம்பி விக்னேஷ் உடல் நசுங்கி பலியானார்.
இந்த வழக்கில் பட்டாளத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் தாஸ். 42 என்பவர் கைது செய்யப்பட்டார்