காஞ்சிபுரம்,:பெரிய காஞ்சிபுரம், ஜவஹர்லால் நேரு மார்க்கெட் பின்புறம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை உற்சவம் நடைபெறும்.
அதன்படி, 140வது ஆண்டு மயான கொள்ளை உற்சவம் வரும் 19ல் நடைபெறுகிறது. விழாவையொட்டி வரும் 17ல், காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பந்தக்கால் விழா நடக்கிறது.
பிப்., 18ல், இரவு 7:00 மணிக்கு மஹா சிவராத்திரி விழா அம்மன் சிவலிங்க பூஜையுடன் வீதியுலா நடக்கிறது. மயான கொள்ளை உற்சவமான பிப்.,19ல், மதியம் 1:30 மணிக்கு, சகல மேள வாத்தியங்களுடன் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி கிழக்கு ராஜ வீதி, புத்தேரி தெரு வழியாக வீதியுலா செல்கிறார்.
சர்வதீர்த்தம் அடுத்த மயானத்தில், மாலை, 6:00 மணிக்கு மயான கொள்ளை உற்சவம் நடைபெறுகிறது. பிப்., 20ல் இரவு, 7:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், கும்பம் படையலிடப்படுகிறது. பிப். 21ல், காலை, 7:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.
மாலை 6:00 மணிக்கு பாண்டியன் சண்முகம் பரதாலயா பரதநாட்டியப் பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் பருவதராஜகுல மீனவ சமூகத்தினர் செய்து வருகின்றனர்.