விழுப்புரம்-மயிலம் அருகே கண்டெய்னர் லாரி மீது கோலமாவு ஏற்றிச்சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு தென்பசார் சந்திப்பில், நேற்று காலை முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது, கோலமாவு ஏற்றிச் சென்ற மற்றொரு லாரி மோதிய விபத்தில், லாரிகள் சாய்ந்து, சாலை மையத்தில் நின்றன. இந்த விபத்தில், இரண்டு ஓட்டுனர்களும் காயமடைந்தனர். உடனே அவர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தின்போது, கண்டெய்னர் லாரியானது விபத்து ஏற்பட்டு சாலையோரம் விழுந்ததால், திருச்சி மார்க்கம் செல்லும் வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால், ஒரு வழிப்பாதையாக அனுப்பி வைக்கப்பட்டது. மயிலம் போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.