செஞ்சி,-மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அடுத்த நங்காத்துார் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி மகள் பவானி 20. இவர், போலீஸ் வேலையில் சேர்வதற்காக கொசப்பாளையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் 8 மாதமாக படித்து வந்தார். கடந்த 25ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என்று சொந்த ஊருக்கு வந்தார். 28ஆம் தேதி அனந்தபுரத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிவிட்டு சென்றார்.
மீண்டும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை என்பதால் அவரது தந்தை குப்புசாமி தனது மகளை கண்டு பிடித்து தருமாறு கஞ்சனுார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.