ஆவடி, ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, பல மாதங்களாக பராமரிக்கப்படாமல் மணல் படிந்து காணப்பட்டது.
இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர், தினமும் கண்ணில் துாசி விழுந்து பெரும் அவதிப்பட்டனர். இது குறித்து, பல புகார்கள் எழுந்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் 'புதுமைப்பெண் - 2ம்' கட்ட திட்டத்தை துவங்கி வைக்க, ஆவடி அடுத்த, பட்டாபிராம், இந்து கல்லுாரிக்கு நேற்று வந்தார்.
அவர் வருவதையொட்டி, திருமுல்லைவாயல் முதல் விழா நடக்கும் இந்து கல்லுாரி வரையான சாலையின் இருபுறமும் படிந்த மணலை, நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று முன்தினம் அதிரடியாக அகற்றி, துாய்மை பணிகள் மேற்கொண்டனர்.
இதனால் சாலை மற்றும் மைய தடுப்புகள் பளபளப்பானது.