செஞ்சி--மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
செஞ்சி அடுத்த வி.நயம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகள் காஞ்சனா 19. பிளஸ் 2 படித்துவிட்டு சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். மறைமலை நகரில் விடுதியில் தங்கி இருந்தார். கடந்த 3ஆம் தேதி வி.நயம்பாடியில் நடந்த சகோதரியின் திருமணத்திற்காக சொந்த ஊர் வந்திருந்தார்.
அப்போது குடும்பத்தினர் காஞ்சனாவிற்கு திருமண ஏற்பாடு செய்யலாமா என சம்மதம் கேட்டுள்ளனர். இதற்கு பதில் சொல்லாமல் இருந்த காஞ்சனா 6ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.
இது குறித்து கதிர்வேல் கொடுத்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.