அம்பத்துார், பட்டரவாக்கம் ரயில் நிலையம், ஆட்டோ நிறுத்தம் அருகே, அம்பத்துார் மதுவிலக்கு போலீசார், நேற்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, போர்வை விற்பனை செய்வதுபோல் சந்தேகத்திற்கிடமாக இருந்த, வடமாநில வியாபாரிகளை விசாரித்தனர்.
அதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பால், 43, லால்சன் லைமா, 31, என்பது தெரிந்தது. மேலும், கஞ்சா வியாபாரிகளாக இருந்ததும் தெரிந்தது.
தப்பியோட முயன்ற இருவரையும், மடக்கி பிடித்து, போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.