கொளத்துார், கொளத்துார் அடுத்த அகரம், சோமசுந்தரம் தெருவில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கோவிந்த்ராம், 38, குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர், தான்தோன்றியமம்மன் கோவில் தெருவில், 'பிரேமா தேவி பான்புரோக்கர்ஸ்' என்ற பெயரில், அடகு கடை நடத்தி வந்தார்.
சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த பலர், அவசர பணத்தேவைக்காக, இவரிடம் நகையை அடகு வைத்திருந்தனர்.
இந்த நிலையில், திரு.வி.க., நகர், வெற்றி நகர், ஜவஹர் நகர்களைச் சேர்ந்த டில்லிபாய், 50, சோபனா, 32, கெஜலட்சுமி, 38, சாயினா, 35, கனிமொழி, 45, ஆகியோர், தங்களது நகைகளை மீட்க, 15 நாட்களுக்கு முன், கடைக்கு சென்றனர்.
அப்போது கோவிந்த்ராம், நகைகளை லாக்கரில் இருப்பதாக கூறி திருப்பி அனுப்பினார்.
இம்மாதம், 2ம் தேதி, அவர்கள் மீண்டும் சென்றபோது, கடை மூடப்பட்டிருந்தது. பக்கத்து கடைக்காரர்களிடம் கேட்டபோது, குடும்பத்துடன் அவர் தலைமறைவானது தெரிந்தது.
இதையடுத்து, 96 சவரன் நகைகளை சுருட்டிக்கொண்டு, கோவிந்த்ராம் தலைமறைவானதாக, பாதிக்கப்பட்டோர்,
இதுகுறித்து செம்பியம் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.