குன்னுார் : குன்னுார் எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில், தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
குன்னுார் தீயணைப்பு நிலையம் சார்பில், எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மகாலட்சுமி முன்னிலை வகித்தார். தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் பேசுகையில்,''கடந்த ஓராண்டில், 15 மருத்துவமனைகளில் தீ பிடித்துள்ளது. தீ பிடித்ததும் உடனடியாக ஆரம்ப கட்டத்தில் அதற்கான உபகரணங்களை பயன்படுத்தி அணைக்க வேண்டும். எந்த இடங்களில் தீ ஏற்பட்டாலும் தீயை அணைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,'' என்றார்.
முன்னணி தீயணைப்பாளர் சுப்ரமணி பேசுகையில், ''செயற்கை இயற்கை என இரு விதங்களில் பேரிடர் ஏற்படுகிறது. துருக்கி, சிரியாவில் இயற்கையான முறையில் ஏற்பட்டு உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது. செயற்கை முறையில் ஏற்படும் தீ விபத்துக்கு, சமயோஜிதமாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டால் உயிரிழப்புகளை தவிர்க்கலாம்,'' என்றார். தீப்பிடித்தால் உடனடியாக அணைப்பது குறித்த செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. சுகாதார நிலைய ஊழியர்கள், தீயை அணைக்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்.