விக்கிரவாண்டி--விக்கிரவாண்டி ஒன்றியம் கயத்துாரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் கயத்துார் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக முதல்வர் உத்திரவிட்டத்தன் பேரில் நேற்று தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி தலைமை நெல் கொள்முதல் நிலையத்தையும், விவசாயிகளின் குடிநீர் பற்றாக்குறையை போக்க மினி பவர் டேங்கையும் திறந்து வைத்து பேசினார்.
ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம்,தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவிதுரை ,மும்மூர்த்தி,முருகவேல்,நகர செயலாளர் நைனாமுகமது, கண்காணிப்பு குழு எத்திராசன், ஆவின் இயக்குனர் அரிகரன்,மாவட்ட பிரதிநிதி திலகர் , ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வி முருகையன்.
சீனுவாசன்,செல்வி,ஒன்றிய கவுன்சிலர் அன்பரசி நீதி, துணைத்தலைவர் கிருஷ்ணராஜ், குமார், முன்னாள் கவுன்சிலர் ராஜசேகர், வெங்கிடசாமி, சர்க்கரை, ராமலிங்கம், அருண், வி.ஏ.ஓ., தமிழரசி, ஊராட்சி செயலாளர் தணிகாசலம், உட்பட விவசாய சங்க பிரதிநிதி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.