காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரு, திருப்பதி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தொலைதுார இடங்களுக்கும், சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், சென்னை செல்லும் பேருந்து நிற்குமிடத்தில், பாதாள சாக்கடையில் இருந்து வெளியேறிய கழிவு நீர் தேங்கியுள்ளது.
இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், மூக்கை மூடியபடி செல்கின்றனர்.
மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி, கழிவு நீர் தேங்காமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.