விழுப்புரம்-அகில இந்திய அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் விழுப்புரம் ஆயுதப்படை டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த 3ம் தேதி அகில இந்திய அளவிலான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகள் நடந்தது. இதில், விழுப்புரம் ஆயுதப்படை டி.எஸ்.பி., கனகராஜ் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர். டி.எஸ்.பி., கனகராஜ், நீச்சல் போட்டியில் இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களையும், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் இடம் பெற்று தங்கம் பதக்கம் வென்றார்.
சாதனைபடைத்த டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டரை தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., பாண்டியன், எஸ்.பி., ஸ்ரீநாதா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.