அன்னுார்: அன்னுார் நவபாரத் இன்டர்நேஷனல் பள்ளியில், மழலையர் விளையாட்டு விழா நடந்தது.
விழாவில், புளியம்பட்டி, விஷ்ணு ஹாஸ்பிடல் சேர்மன் டாக்டர் சுப்பிரமணியம் தேசிய கொடி ஏற்றி, மழலையரின் அணிவகுப்பையும், மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
அவர் பேசுகையில், பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு, பாடத்துடன் சேர்ந்து நற்பண்புகளையும், தேக ஆரோக்கியத்தையும் பெற பள்ளியுடன் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.
மாணவ, மாணவியர், உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் செய்தது பெற்றோரை கவர்ந்தது. குழந்தைகளுக்கு, ஓட்டப்பந்தயம், வேடிக்கை விளையாட்டு போட்டி ஆகியவை நடந்தன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி செயலாளர் நந்தகுமார், அறங்காவலர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.---