மடிப்பாக்கம், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், ராணி என்டர்பிரைசஸ் காஸ் ஏஜன்சி சார்பில் மடிப்பாக்கம், வெங்கடேஷ்வரா அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவியருக்கு, 'காஸ்' சிலிண்டர் கையாள்வது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
காஸ் கசிவு ஏற்பட்டால், விபத்தில்லாமல் தவிர்ப்பது எப்படி, சிலிண்டர் தீ பற்றினால் என்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டன.
ஐ.ஓ.சி., கள அலுவலர் சம்பத்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சொர்ணலதா, மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.