பந்தலுார் : பந்தலுார் அருகே குந்தலாடி, ஓர்க்கடவு தானிமூலா உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, ஒற்றை யானை முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு தானிமூலா கிராமத்திற்கு வந்த ஒற்றை யானை, ரவி என்பவரின் வீட்டு வாசலில் இருந்த தென்னை மரத்தை சேதப்படுத்தியது.
தகவலின் பேரில், நள்ளிரவு, 12:00 மணிக்கு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் வாகனத்தை சேதப்படுத்தியது.
பின்னர், கிராம பகுதியில் முகாமிட்டிருந்த யானை காலை, 6:00 மணிக்கு கிராமத்தை ஒட்டிய புதருக்குள் சென்று மறைந்தது.
இந்த பகுதியில் நெலக்கோட்டை ஊராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் சரியாக எரியாததால், விலங்குகள் வருவதை அறிய முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும், யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனக்குழுவினருக்கும் யானை நிற்பது தெரியாமல் சிரமப்படுகின்றனர்.
எனவே, இந்த பகுதியில் உள்ள தெருவிளக்குகளை சீரமைத்து தரவும், இரவில் யானைகள் வருவதை கண்காணித்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.