சூலுார் : சூலுார் அருகே கஞ்சா சாக்லெட்கள் விற்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.
சூலுார், கருமத்தம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லெட்டுகன் விற்பவர்கள், பதுக்கி வைத்திருப்பவர்களை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்து வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் தலைமையில், சூலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரங்கநாத புரம் அருகே நேற்று போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது, கையில் பையுடன் நடந்து சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். அவர், திருப்பூர் மாவட்டம், பருவாய் அடுத்த ஆறாக்குளத்தை சேர்ந்த டாபிஸ் தாஸ், 51 என்பதும், அவர் பையில் கஞ்சா சாக்லெட்டுகன் வைத்திருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து அந்நபரை கைது செய்த போலீசார், 18 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதேபோல், படகுத்துறை அருகே போலீசார் ரோந்து சென்றனர்.
சூலுார், சேர்மன் கருப்பண தேவர் வீதியை சேர்ந்த, செல்வராஜ் மகன் சக்திவேல், 28, சூலுாரை சேர்ந்த பழனிசாமி மகன் கார்த்திக், 24 ஆகிய இருவரும் கஞ்சா சாக்லெட்டுகளை விற்றுக்கொண்டிருந்த போது, கையும் களவுமாக சிக்கினர்.
அவர்களிடம் இருந்து, 10 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.