பெ.நா.பாளையம்: சின்னதடாகம், குருடம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் பட்டா மாறுதல் முகாம் இன்று நடக்கிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சின்னதடாகம் ஊராட்சியில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஊராட்சிக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் வழங்குதல், சிறு, குறு விவசாயி சான்று வழங்குதல், கிசான் அட்டை வழங்குதல், பயிர் கடன் வழங்கும் முகாம், கால்நடை முகாம் உள்ளிட்டவை சின்னதடாகம் ஊராட்சி அலுவலகத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது.
விவசாயிகள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும், 5 வகையான மரக்கன்றுகள், செடிகள், 40 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இதை பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், ஒரு போட்டோ ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
இதே போல பட்டா மாறுதல் முகாம் மற்றும் பழ மரக்கன்றுகள் வழங்கும் முகாம் ஆகியன குருடம்பாளையம் ஊராட்சி, அருணா நகர் சமுதாய கூடத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இத்தகவலை பெரியநாயக்கன்பாளையம் வேளாண் துறையினர் தெரிவித்தனர்.