ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் குறித்த ஆய்வுக்கூட்டம்

Added : பிப் 08, 2023 | |
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.விழுப்புரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து, அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக்
 ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லுாரி மாணவர்களுக்கு  கல்வி உதவித்தொகை வழங்கல் குறித்த ஆய்வுக்கூட்டம்



விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.

விழுப்புரத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து, அனைத்து கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் பழனி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மத்திய அரசால் வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லுாரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்கள், கல்வி உதவித் தொகை பெற 2022-23ம் ஆண்டு முதல் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள https://tnadtwscholarship.tn.gov.in/index.php என்ற இணையதள வழியில் விண்ணப்பிக்க அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் 80 அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி கல்லுாரிகளுக்கு கடவுசொல் வழங்கப்பட்டு, அதன் மூலம் 2022-23ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் 80 கல்லுாரிகளில் பயிலும் மாணவர், புதுப்பித்தல் விண்ணப்பம் 8,675ம், புதிய விண்ணப்பங்கள் 4,701ம் உள்ளது. ஆனால், இதுநாள் வரை 225 விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இத்திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்க குறுகிய காலம் உள்ளதால், எந்தவொரு மாணவரும் விடுபடாத வகையில், அனைத்து கல்லூரி முதல்வர்களும் தனிகவனம் செலுத்தி இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலர் பத்மலதா, மற்றும் கல்லூரி முதல்வர்கள், பிற அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X