மீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகள்; போக்குவரத்து நெருக்கடி அன்னூரில், மீண்டும் முளைத்த ஆக்கிரமிப்புகள் போக்குவரத்து நெருக்கடி

Added : பிப் 08, 2023 | |
Advertisement
அன்னுார் : நெடுஞ்சாலைத்துறை அகற்றிய ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவானதால் அன்னுாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.அவிநாசி -- மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலைக்கும், கோவை- - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மையமாக அன்னுார் உள்ளது. ஆக்கிரமிப்புகள் காரணமாக அன்னுார் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில்



அன்னுார் : நெடுஞ்சாலைத்துறை அகற்றிய ஆக்கிரமிப்புகள் மீண்டும் உருவானதால் அன்னுாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அவிநாசி -- மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலைக்கும், கோவை- - சத்தி தேசிய நெடுஞ்சாலைக்கும், மையமாக அன்னுார் உள்ளது. ஆக்கிரமிப்புகள் காரணமாக அன்னுார் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கின்றன.

இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன் நெடுஞ்சாலை துறையும், காவல்துறையும் இணைந்து மேட்டுப்பாளையம் சாலை, ஓதிமலை சாலை, அவிநாசி சாலை மற்றும் தென்னம்பாளையம் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாக மீண்டும் மேட்டுப்பாளையம் சாலை, ஓதிமலை சாலை மற்றும் தென்னம்பாளையம் சாலையில் வர்த்தக நிறுவனங்கள் ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தி விட்டன. தள்ளுவண்டி கடைகள், விளம்பரப் பலகைகள், என தார் ரோடு வரை ஆக்கிரமிப்புகள் நீண்டு விட்டன. இதனால் போக்குவரத்துக்கு மீண்டும் இடைஞ்சல் ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்த பிறகே அன்னுாரை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

'நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றிய உடனே தார் சாலை அமைக்க வேண்டும், மின் கம்பங்களை சாலையின் உள்புறம் நகர்த்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாது,' என பொதுமக்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X