திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு சார்பில், மேயர், துணை மேயர், கமிஷனர் ஆகியோரிடம் அளித்த மனு:
கடந்த 7ம் தேதி, சப் கலெக்டர் அலுவலகத்தில், உழவர் சந்தை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், பங்கேற்ற ஒருவர், மாநகராட்சி அலுவலர்களை தரக்குறைவாகவும், கையூட்டு பெற்றுக் கொண்டு செயல்படுகின்றனர். மொத்த நிர்வாகமும் ஊழல்வாதிகள் எனவும் பேசினார்.
பல்லடம் ரோடு, நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமானது. இருப்பினும், மாநகராட்சி சார்பில் அங்கு அதிகாலை 4:00 மணி முதல் அங்கு அலுவலர்கள் பணியாற்றி, ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றனர்.
இதை தவிர்த்து விட்டு, அவதுாறாக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதுவரை உழவர் சந்தை தொடர்பாக மாநகராட்சி அலுவலர்கள் எந்த பணியிலும் ஈடுபட மாட்டார்கள்.
இவ்வாறு, மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.