கடலுார்-பெரியப்பட்டு பெரியநாகேஷ்வரர் கோவில் கும்பாபிேஷகம் நாளை (10ம் தேதி) நடக்கிறது.
புதுச்சத்திரம் அருகே, பெரியப்பட்டு கிராமத்தில் பெரியநாகேஷ்வரர் சாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டதை தொடர்ந்து, நாளை (10ம் தேதி) கும்பாபிேஷகம் நடக்கிறது. அதையொட்டி, இன்று (9ம் தேதி) காலை பூஜைகள் துவங்குகிறது.
மாலை முதல்கால யாகசாலை பூஜையும், கும்பாபிேஷக தினமான நாளை காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 7:30 மணிக்கு நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, 8:00 மணிக்கு கடம் புறப்பட்டு, 8:15 மணிக்கு கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் நடக்கிறது.