கோவை : தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கம் மற்றும் கோவை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கம் சார்பில், மாநில அளவிலான 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான டேபிள் டென்னிஸ் போட்டி, பெர்க்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது.
இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 110 வீரர்கள் பங்கேற்றனர். வீரர்களுக்கு, 40, 50, 60, 65, 70, 75 வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில், சரத் சங்கர் முதலிடம், ஹரிநாராயணன் இரண்டாம் இடம்; 50 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், எதிராஜன் முதலிடம், சாமிநாதன் இரண்டாமிடம்; 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், கல்யாணராமன் முதலிடம், காசி விஸ்வநாதன் இரண்டாமிடம்; 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில், சேகர் முதலிடம், ஸ்ரீதர் இரண்டாமிடம்; 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில், பிரேம் குமார் முதலிடம், உமாபதி இரண்டாமிடம்; 75 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில், ராமகிருஷ்ணன் முதலிடம், இருதயராஜ் இரண்டாமிடம் பிடித்தனர்.
40 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில், சரத் சங்கர் மற்றும் செந்தில் ஜோடி; 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான இரட்டையர் பிரிவில் கல்யாணராமன் மற்றும் வீரராகவன் ஜோடி முதலிடத்தை பிடித்தன.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ரொக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற வீரர்கள், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றனர்.