உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் ஊராட்சி மன்றம் சார்பில், அப்பகுதி, சேவை மையம் கட்டடத்தில் நேற்று சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடந்தது.
ஒரகடம்., பி.எஸ்.பி., மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில், நோய் கண்டறிதல், உடல் எடை ஆலோசனை, உயர் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சர்க்கரை நோய், எலும்பு உறுதித் தன்மை, நரம்பு சிகிச்சை.
காது, மூக்கு, தொண்டை மற்றும் மகளிர் நல மருத்துவம் உள்ளிட்டவைகள் குறித்து பரிசோதிக்கப்பட்டது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், ஹூமோகுளோபின் அளவு உள்ளிட்டவைகளும் இம்முகாமில் கண்டறியப்பட்டது.
இதய சிறப்பு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை, மகளிர் மற்றும் பொது மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை, உணவு கட்டுப்பாட்டு நிபுணர்களின் ஆலோசனைகளும் முகாமில் அளிக்கப்பட்டது.
திருமுக்கூடல் ஊராட்சி தலைவர் மஞ்சுளா முருகன் தலைமையில் நடந்த இம்முகாமில், அப்பகுதியைச் சேர்ந்த 216 பேர் பங்கேற்று, 26 நபர்கள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.