கோவை : பள்ளி கல்வித்துறை சார்பில், குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினத்தையொட்டி மாணவ - மாணவியருக்கான பாக்சிங் போட்டி சிவகங்கை மாவட்டத்தில் நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, 14, 17 மற்றும் 19 வயது பிரிவின் அடிப்படையில், பல்வேறு எடை பிரிவுகளில் போட்டியிட்டனர்.
இதில் கோவை மாவட்டம் சார்பில் பங்கேற்ற, மாணவர்கள் ஆறு பதக்கமும், மாணவியர் 8 பதக்கமும் வென்று அசத்தினர்.
மாணவர் பிரிவு: 14 வயது பிரிவில், ஆர்.கே., ஸ்ரீ ரங்கம்மாள் பள்ளி மாணவர் ஹரிகரன் வெண்கலம், 17 வயது பிரிவில், பார்க் பள்ளி தி தேவ் பத்ரிகுமார், மதர்லேண்ட் பள்ளி மாணவர் நிவாஷ் ஆகியார் வெண்கலம்,எஸ்.எஸ்.வி., பள்ளி மாணவர் திவேஷ் குமார் வெள்ளி மற்றும் 19 வயது பிரிவில் வெங்கடலட்சுமி பள்ளியின் தரணிஷ் மற்றும் மதர்லேண்ட் பள்ளியின் நியாஷ் ஆகியோர் வெண்கலம் என ஆறு பதக்கங்கள் வென்றனர்.
மாணவியர் பிரிவு: 14 வயது பிரிவில், புனித பிலோமினாள் பள்ளி மாணவி கங்காதேவி வெண்கலம், ராமகிருஷ்ணா புரம் மாநகராட்சி பள்ளியின் அர்ச்சனா வெள்ளி; 17 வயது பிரிவில், மகாஜனா பள்ளியின் நேஹிலாஸ்ரீ, வெங்கடலட்சுமி பள்ளியின் கற்பகபிரியா ஆகியோர் வெள்ளி, அல்வேர்னியா பள்ளி சாரா வெண்கலம்; 19 வயது பிரிவில், அவிலா பள்ளி மாணவி நபீசா தங்கம், அல்வேர்னியா பள்ளி மாணவியர் மதுஸ்ரீ வெள்ளி மற்றும் விஷ்மயா வெண்கலம் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவியரை, கோவை மாவட்ட உடற்கல்வி இயக்குனர் குமரேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.