ஸ்ரீபெரும்புதூர்:தாம்பரம் மாநகர் காவல், மணிமங்கலம் சரகம், சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுவீரப்பட்டு கூட்டு சாலையில், காவல் உதவி மையம் உள்ளது. இந்த மையம் அன்மையில் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. மணிமங்கலம் சரக உதவி கமிஷனர் ரவி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் பங்கேற்று திறந்து வைத்தார். மேலும், அந்த பகுதியில் பூச்செடிகள், மரக்கன்றுகள் நடவு செய்தார்.
இணை கமிஷனர் மூர்த்தி, துணை கமிஷனர் ஆதிவிரப்பாண்டியன், இன்ஸ்பெக்டர் சிவகுமார், மகிதா அன்னா கிரிஸ்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.