நொளம்பூர், சென்னை, முகப்பேர் மேற்கு, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த அரவிந்தன், 28. இவர், கடந்த 28ம் தேதி வீட்டில் கோபித்துக் கொண்டு, முகப்பேர் மேற்கு, வெள்ளாளர் தெருவில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் மது அருந்த சென்றார்.
பின், அதிக போதையில் துாங்கிவிட்டார். பின் எழுந்து பார்த்தபோது, அவரது 7 சவரன் செயின் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து நொளம்பூர் போலீசார் விசாரித்தனர். இதில், செயினை பறித்து சென்றது, பாடி பெரியார் நகர், அவ்வை தெருவைச் சேர்ந்த சங்கர், 36, என தெரிய வந்தது.
நேற்று அவரை கைது செய்த போலீசார், செயினை பறிமுதல் செய்தனர். சங்கர் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு உள்ளது.