கடலுார்-மத்திய மாநில பொதுத்துறை நிறுவனங்களி்ல் ஒப்பந்த முறையை கைவிடக்கோரி, கடலுாரில் சி.ஐ.டி.யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் மாவட்ட சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில், திருப்பாதிரிபுலியூர் ஜவான்பவன் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய மாநில பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும், அந்நிறுவனங்களில் பணிபுரியம் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு நிறுவனங்களை தனியார் துறைக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராஜேந்திரன் மாவட்ட செயலாளர் பழனிவேல் பேசினர்.
மாநிலக்குழு ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் சீனுவாசன், மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் ஆளவந்தார், திரு அரசு, சுப்ராயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.