பரங்கிப்பேட்டை-புவனகிரி அருகே சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தொழிலாளி, இறந்தார்.
புவனகிரி சுத்துக்குழி குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் முருகேசன், 50; தொழிலாளி. இவர் நேற்று மனைவி லட்சுமியுடன், 40; சைக்கிளில் புவனகிரி அருகே வந்த போது, பின்னால் வந்த டிராக்டர், சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில், பலத்த காயமடைந்த முருகேசன், சிதம்பரத்திலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து, புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.