நங்கநல்லுார் நங்கநல்லுார், மெட்ரோ ரயில் நிலையம் அருகில், நேற்று முன்தினம் இரவு ஜி.எஸ்.டி., சாலையை, ஒரு பெண் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இறந்த, 50 வயது மதிக்கத்தக்க பெண்ணின் பெயர், விலாசம் தெரியவில்லை. சிகப்பு நிற சுடிதார் அணிந்திருந்தார்.
இந்த விபத்து குறித்து மவுன்ட் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.