கோவை : சிறுமுகைஅம்பாள் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நேற்று தங்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனர்.
மேட்டுப்பாளையம் அருகில் உள்ளசிறுமுகையில் உள்ள ஆறுக்குட்டி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் சார்பில் இயங்கி வரும், அம்பாள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியை மங்கையர்க்கரசியார்அறக்கட்டளையினர் துவக்கி வைத்தனர்.
பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி, செயலாளர் கீதா, முதல்வர்கள் சித்ரா ஜெயந்தி, திருமூர்த்தி, துணை முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.