கண்ணகி நகர், காரப்பாக்கம், சடகோபன் தெருவைச் சேர்ந்த யுவராஜ் மகன் ஏழுமலை, 9. மனவளர்ச்சி குன்றிய ஏழுமலை, தரமணியில் உள்ள ஒரு சிறப்பு பள்ளியில் படித்து வந்தான்.
நேற்று முன்தினம் மாலை, வெளியே விளையாட சென்ற சிறுவன், வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்கவில்லை. கண்ணகி நகர் போலீசாரும், மறு திசையில் தேடினர்.
இந்நிலையில், வீட்டின் அருகே, வேண்டவராசி அம்மன் கோவிலை ஒட்டி ஒரு கிணறு உள்ளது.
இதில், இரும்பு ஜல்லடை போட்டு மூடப்பட்டிருந்தது.
சந்தேகத்தின்பேரில், நேற்று காலை, கிணற்றில் பார்த்தபோது, ஏழுமலை உடல் சடலமாக மிதந்தது.
போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சிறுவன் மரணம் குறித்து, பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.