நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பத்தில் பா.ஜ., நகர செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நகர தலைவர் வேலுமணி தலைமை தாங்கினார். மாநில பட்டியலின மாநில பொது செயலாளர் ரங்கேஷ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மகளிரணி அபிராமசுந்தரி கல்வியாளர் பிரிவு மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பிற்பட்டோர் பிரிவு மாநில செயலாளர் சந்தோஷ்குமார், நகர செயலாளர் கிருஷ்ணராஜ், கிருபானந்தம், சவுந்தரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை வைக்க கூடாது. கடலூர் மடப்பட்டு சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக சாலை அமைக்காவிட்டால் போராட்டம் நடத்துவது. விஸ்வநாதபுரம் செல்லும் சாலையில் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.