மாமல்லபுரம், சென்னை, திருவொற்றியூர், பாபு மகன் எஸ்வந்த்ராஜ், 20. பழைய வண்ணாரப்பேட்டை, சங்கர் மகன் ஆகாஷ், 20. இவர்கள் இருவரும், வியாசர்பாடி பகுதி தனியார் கல்லுாரி, பி.காம்., இறுதியாண்டு மாணவர்கள்.
விடுமுறை நாட்களில், பகுதி நேர வேலையும் செய்வர். மாமல்லபுரம், தனியார் விடுதியில் நடந்த திருமண பணிகளில் ஈடுபட, நேற்று காலை, சென்னையிலிருந்து, மாமல்லபுரத்திற்கு, 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
மாமல்லபுரம் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில், 8:15 மணிக்கு கடந்தபோது, முன்னால் சென்ற, கல்பாக்கம் ஊழியரின் கார், நேராக செல்வதை போல் சென்று, திடீரென இடதுபுறம் திரும்பி, அவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இவ்விபத்தில், எஸ்வந்த்ராஜ், அதே இடத்தில் இறந்தார். ஆகாஷ், சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.