பூந்தமல்லி, பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, பேருந்து நிறுத்தம் உள்ளது.
பூந்தமல்லியில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள், இங்கு நின்று செல்கின்றன. தினசரி, நுாற்றுக்கணக்கான மக்கள், இந்நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.
இங்குள்ள பயணியர் நிழற்குடையை ஆக்கிரமித்து, சிலர் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால், பயணியர் நிற்பதற்கு இடமில்லாமல் தவிக்கின்றனர். மற்றொரு புறம், போக்குவரத்து நெரிசலும், அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. இது குறித்து புகார் தெரிவித்தும், போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதே இல்லை.
நிழற்குடையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றி, சம்பந்தப்பட்டோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.