கோவை : மாநகராட்சி 45வது வார்டு மேட்டுப்பாளையம் ரோடு, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் வணிக வளாகத்தில் உள்ள கடைகளுக்கு, வாடகை நிலுவை இருந்தது.
இதனிடையே, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் வளாகத்தில் நேற்று சிறப்பு வரிவசூல் பணிகள் நடைபெற்றன. இதில், நோட்டீஸ் வழங்கப்பட்ட 16 கடைகளில், 10 வாடகைதாரர்கள் உரிய தொகையை செலுத்தினர். சுமார் 8.60 லட்சம் ரூபாய் வாடகை நிலுவை வைத்துள்ள 6 கடைகளை, மேற்கு மண்டல உதவி கமிஷனர் சேகர் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.