அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள், இதுவரை யாரும் உரிமை கோரப்படாத, 114 டூவீலர்கள் பிப்., 8 ம் தேதிபொது ஏலம் விடப்பட உள்ளது என்று மாநகர போலீசார் அறிவித்தனர்.நேற்று காலை, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் பொது ஏலம் நடந்தது. வடக்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த ஏலத்தில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனைத்து வாகனங்களும், 2 லட்சத்து, 83 ஆயிரத்து,870 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement