ஓ.எம்.ஆரில் இருந்து, செம்மஞ்சேரி நோக்கி செல்லும், நுாக்கம்பாளையம் சாலை உள்ளது. தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள், இவ்வழியாக செல்கின்றன.
செம்மஞ்சேரி சந்திப்பில், மூடு கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. இதற்காக, இருவழி சாலை, ஒரு வழியாக மாற்றப்பட்டது. இதனால், காலை, மாலை நேரத்தில், நெரிசல் அதிகரித்து, ஒரு கி.மீ., வரை வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
சில நேரம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன. இந்த பகுதி, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய எல்லையில் உள்ளது. ஆனால், போலீசார் நின்று போக்குவரத்தை சீரமைப்பதில்லை.
சில நேரம், சட்டம் - ஒழுங்கு போலீசார் நிற்கின்றனர். இருந்தாலும், போக்குவரத்து போலீசார் நின்றால் தான், நெரிசலைத் தடுக்க முடியும்.
-என்.கண்ணன், 57, செம்மஞ்சேரி.