அனுப்பர்பாளையம் : திருப்பூர், சாமுண்டிபுரம் சூரியகாந்தி வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன், 25; ஹிந்து முன்னணி சாமுண்டிபுரம் பகுதி செயலாளர். இவருக்கும், தியாகி பழனிச்சாமி நகரை சேர்ந்த ராம்பிரபு, 26, என்பவருக்கு முன் விரோதம் இருந்து வருகிறது.
செல்லம்மாள் காலனியில் சென்று கொண்டிருந்த சுரேந்திரனை ராம்பிரபு, கத்தியால் குத்தி விட்டு, தலைமறைவானார். படுகாயம் அடைந்த சுரேந்திரன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வேலம்பாளையம் போலீசார், தலை மறைவான இருந்த ராம்பிரபுவை கைது செய்தனர்.