காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வர்த்தக சங்கம் மற்றும் ஐ.டி., ஜி.எஸ்.டி., பி.ஏ., தமிழகம் அமைப்பு சார்பில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிக்கான காஞ்சிபுரத்தில் நடந்த விளக்க உரை மற்றும் விழிப்புணர்வு கூட்டத்திற்கு காஞ்சிபுரம் வர்த்தக சங்கத் தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில், தமிழகம் அமைப்பைச் சேர்ந்த சிவசண்முகம் ஜி.எஸ்.டி., வரி குறித்தும், இதில் வந்துள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.
வணிகர்கள் கேட்ட ஜி.எஸ்.டி., சம்பந்தமான சந்தேங்களுக்கும் விளக்கம் அளித்தார்.
இதில், வர்த்தக சங்க செயலர் மோதிலால், பொருளாளர் அஸ்லம்பாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement