பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கம் சந்திப்பில், இரண்டு மேம்பாலங்களின் இரு பக்க ஓரங்களிலும், மணல் படுகைகள் அதிகமாக உள்ளன. இதனால், இருசக்கர வாகனங்களில் பயணிப்போர், சறுக்கி விழுந்து விபத்துகளை சந்திக்கின்றனர்.
இரவு நேரத்தில், மேம்பாலங்களில் போக்குவரத்து குறைவாக இருப்பதாலும், மின் விளக்குகள் சரியாக எரியாததாலும், சமூக விரோதிகள், தங்கள் வாகனங்களை நிறுத்தி, மது அருந்துகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மேம்பாலத்தில் உள்ள மணல் படுகைகளை அகற்றி, மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். பாலம், மதுக்கூடமாக மாறுவதை தடுக்க வேண்டும்.
- எல்.காவ்யா, 24, கவுரிவாக்கம்.
Advertisement