காஞ்சிபுரம்:தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சார்பில், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், எஸ்.எஸ்.எம்., பாலிடெக்னிக் கல்லுாரியில், நோபல் உலக சாதனைக்காக வட்டையாசனம் யோகாசன போட்டி நடந்தது.
இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மூன்று வயது முதல், 30 வயதிற்கு உட்பட்ட 300 பேர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் சஹானா யோகா பயிற்சி பள்ளி சார்பில் பங்கேற்ற, காஞ்சிபுரம் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி மாணவி சஹானா, திருக்காலிமேடு அரசு பள்ளி மாணவர் யாஸ்மிதன், மாணவி ஜனனி, கத்ரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவன் ஜெகதீசன், சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப்ள்ளி மாணவி யாஷினி, பச்சையப்பன் மகளிர் கல்லுாரி மாணவியர் சுபசக்தி, ஐஸ்வர்யா ஆகியோர் வெற்றி பெற்று நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.
இம்மாணவ- - மாணவி யருக்கு பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் நிர்மல் குமாருக்கு, 'யோகாச்சாரியா' விருது வழங்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு யோகா கூட்டமைப்பின் காஞ்சிபுரம் செயலர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இதேபோல, காஞ்சிபுரம் பிராணா யோகா மையம் சார்பில் பங்கேற்ற ஏழு மாணவர்களும் வெற்றி பெற்று, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர். இம்மாணவர்களை, பயிற்சி மைய ஆசிரியர் நாராயணமூர்த்தி பாராட்டினார்.
Advertisement