கடலுார்-கடலுார் முதியோர் உதவி மையத்தில், இணையதள பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இணைய வழி பாதுகாப்பு தினத்தையொட்டி, நடத்தப்பட்ட பயிற்சியை, இணையதள பாதுகாப்பு பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பாரத்வேல் காணொளி மூலம் முதியவர்களுக்கு நடத்தினார்.
நிகழ்ச்சியில் கடலூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க தலைவர் தேவநாதன், செயலாளர் செல்வராஜ், கடலுார் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க நிர்வாகிகள் வேணுகோபால், கந்தசாமி, கமலகண்ணன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய முதியோர் உதவி எண் திட்ட மேலாளர் கவுதம் யாஷ்பால் மற்றும் முதியோர் உதவி எண் பணியாளர்கள் கலந்து கொண்டு மூத்த குடிமக்களின் இணைய வழி பிரச்னைகள் குறித்து கலந்துரையாடினர்.
பயிற்சி வகுப்பின் மூலம், முதியவர்கள் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துவது, இணைய வழி பண பரிவர்த்தனைகளை முறையாக கையாள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகள் ஹெல்ப்பேஜ் இந்தியா அமைப்பு சார்பில் செய்யப்பட்டிருந்தது.
Advertisement