கோவை: பல்கலை மானியக்குழு சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, வேளாண் பல்கலையை சேர்ந்த நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,), ஒற்றை பெண் குழந்தைகள் பட்டப்படிப்பு வரை படிக்க, சாவித்ரிபாய் ஜோதிராவ் புலே பெயரில், கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தி வருகிறது. கடந்தாண்டு உதவித்தொகை திட்டத்திற்கு, செப்.,மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பில், ஆராய்ச்சி துறை மாணவிகள் முறையே அபர்ணா, தாரிணி, இலக்கியா, பரிபூரணி ஆகியோர் உதவித்தொகை பரிசீலனைக்காக, ஆராய்ச்சி முன்மொழிவை, யு.ஜி.சி.,க்கு அனுப்பினர்.
இவர்கள் நான்கு பேரும், உதவித்தொகை பெற தேர்வாகியுள்ளனர்.
Advertisement