பண்ருட்டி-பண்ருட்டி நகர அ.தி.மு.க., கவுன்சிலர் வெங்கடேசன் இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.
பண்ருட்டி நகர அ.தி.மு.க., 20வது வார்டு கவுன்சிலர் வெங்கடேசன் மகள் லினோபிரியாவிற்கும் பண்ருட்டி எல்.என்.புரம் பக்கிரிசாமி மகன் வாசுதேவன் திருமணம் விலங்கல்பட்டு முருகன் கோவிலில் நடந்தது. திருமண வரவேற்பு பண்ருட்டியில் நடந்தது.
திருமண வரவேற்பு விழாவிற்கு வந்திருந்தவர்களை கவுன்சிலர் வெங்கடேசன்-வசந்தி, பக்கிரிசாமி-கலைசெல்வி ஆகியோர் வரவேற்றனர்.
விழாவில் முன்னாள் அமைச்சர் சம்பத், தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், நகர செயலாளர் ராஜேந்திரன், பா.ஜ., மாநில வர்த்தக அணி தலைவர் தின்ராஜ், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், கமிஷனர் மகேஸ்வரி, அண்ணாகிராமம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர்கள் கந்தன், நாகபூஷணன், தமிழ்செல்வன், அண்ணாகிராமம் ஒன்றிய சேர்மன் ஜானகிராமன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.சி., சிவராமன், அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், நகர அவை தலைவர் ராஜதுரை, தொரப்பாடி பேரூராட்சி நகர செயலாளர் கனகராஜ், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் சிவா, ம.தி.மு.க., நகர செயலாளர் காமராஜ், மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் சண்முகம், செயலர் வீரப்பன், தொழிலதிபர்கள் சரவணன், அருள், பாக்குமண்டி சீராஜீதீன், தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் அன்சாரி, லாரி உரிமையாளர் சங்க தலைவர் துரைக்கண்ணு, செயலாளர் வேலு, முன்னாள் தலைவர் ராஜேந்திரன் , கவுன்சிலர்கள் சரளாமோகன், முருகன், மாவட்ட பிரதிநிதி சீனுவாசன், அவை தலைவர் பரிமளம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement