திருப்பூர் : மாநில, சகோதயா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுப்பையா சென்டரல் பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.
பதினேழு வயது பிரிவினருக்கான, மாநில கால்பந்து விளையாட்டு போட்டியில் (5 ஏ சைடு) சுப்பையா சென்டரல் சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்கள் முகமது ஆசாத், மணிபால்சிங், நிரஞ்சன், ஹரிவைஷ்ணவ், முகமது ஷாகீல் கமலேஷ், சந்தோஷ் ஆகியோர் அடங்கிய அணியினர் பங்கேற்ற இரண்டாமிடம் பெற்றனர்.
சகோதயா ஜூனியர் தடகள போட்டியில், ஆதிஷ், நபாண்யாஸ்ரீ தனீஷ், தக் ஷீமி, கிரீத்யாத்ரா, யோகித்குமார், எரிஸ் ஸ்டீவ் ஆகியோர் அடங்கிய அணி ஏழு தங்கம் வென்றது.
மாவட்ட கால்பந்து போட்டியில், 11 வயது பிரிவில், பிரணவ், சதிஷ்குமார், ஸ்ரீவிக், வைப் கார்த்தி, பிரித்தீஸ்வரன், நபண்யா ஸ்ரீ தனுஷ்,ஆதிஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
போட்டிகளில் பங்கேற்ற, வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் சுகுமாரன், விளையாட்டு ஆசிரியர்கள் மாரிமுத்து, ஆனந்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.